கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்ததை தடுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி சரத்குமார் (வயது 25), தொன்னையன் கொட்டாய் சுப்பிரமணி (60), பெத்ததாளாப்பள்ளி வெங்கடன் (50), வேப்பனப்பள்ளி பயாஸ் பாஷா (50), மகாராஜகடை தர்மராஜா நகர் ரவி (44), சின்ன மேலுப்பள்ளி சுரேஷ் (28), ஓசூர் ராம் நகர் திஸ்வாகித் மாலிக் (53), ஓசூர் தொடுதேப்பள்ளி முனிகிருஷ்ணன் (50), ஓசூர் சிப்காட் முருகபூபதி (60), மத்திகிரி குருபட்டி வெங்கடசாமி (55), ஏ.செட்டிப்பள்ளி வெங்கடேஷ் (39), கோணனூர் கமலம் (45), கல்லாவி மங்கா (40) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story