தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில்  4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 7 Dec 2021 11:05 AM IST (Updated: 7 Dec 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் கெம்பன் (வயது33). பிரபல. ரவுடியான இவர் கடந்த மாதம் 20-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மாரச்சந்திரத்தை சேர்ந்த மகேஷ்குமார் (34), தேர்ப்பேட்டையை சேர்ந்த சிவா (32) உள்பட 6 பேர் ஓசூர் மற்றும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த திப்பனுாரை சேர்ந்த வெங்கடேஷ் (22), தேன்கனிக்கோட்டை கீழ்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (29), டி.கொத்தனுாரை சேர்ந்த முனிராஜ் (23), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் (22), ஆகிய 4 பேரை கோவலில் எடுத்து விசாரிக்க தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்த கொலை தொடர்பாக மாரச்சந்திரத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் (57), பதி (36), ராமு (41) ஆகிய 3 பேரையும் விசாரணைக்கு வருமாறு அவர்களது வீடுகளில் தேன்கனிக்கோட்டை போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதற்கிடையே ரவுடி கெம்பன் கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை மாரசந்திரத்தை சேர்ந்த ராஜ்குமார் (29), லோகேஷ் (24) ஆகிய 2 பேரும் நேற்று கிருஷ்ணகிரி ஜே.எம்.1 கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story