தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த2 பேர் கைது
தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த2 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பிரையண்ட் நகர் பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி அமுதாநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 27), பேச்சிமுத்து (26) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே கொலைமிரட்டல், கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story