அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உள்ள நிழல்குடை புதர்மண்டி கிடக்கிறத


அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உள்ள நிழல்குடை புதர்மண்டி கிடக்கிறத
x
தினத்தந்தி 7 Dec 2021 6:05 PM IST (Updated: 7 Dec 2021 6:05 PM IST)
t-max-icont-min-icon

அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உள்ள நிழல்குடை புதர்மண்டி கிடக்கிறது.

குமரலிங்கம், 
மடத்துக்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உள்ள நிழல்குடை புதர்மண்டி கிடக்கிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 குப்பை
மடத்துக்குளம் பகுதியில் பழனி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மடத்துக்குளம், நீலம்பூர் கண்ணாடிப்புத்தூர், போத்த நாயக்கனூர், மைவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தன. தற்சமயம் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு பள்ளிகள் இயங்க ஆரம்பித்துள்ளன. மழைக்காலம் என்பதால் மாணவ மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கும் ஆளாகின்றனர். 
இந்நிலையில் பள்ளியின் முன்பாக குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பள்ளியின் சுற்றுச் சுவரின் அருகே பரவலாக குப்பைகள் கொட்டப்படுவதால் சாலைகளில் குப்பைகள் காற்றுக்கு பரவுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. 
நிழல் குடை
இந்த பள்ளிக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் வருவதால் அவர்கள் நலன் கருதி பள்ளியின் முன்பாக நிழல் குடை அமைக்கப்பட்டது. அந்த நிழல் குடையும் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் நிழல் குடையும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பள்ளிக் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வந்து பஸ்சுக்காக காத்திருக்க ஏற்ற சூழலில் நிழல் குடை இல்லை. 
எனவே பள்ளியின் முன்பாக கொட்டப்படும் குப்பைகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். 
பள்ளியின் முன்பாக உள்ள நிழல் குடையை சீரமைத்து பள்ளி மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு உதவ வேண்டும் என   சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story