திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2021 6:13 PM IST (Updated: 7 Dec 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, கடனுதவி, பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 526 மனுக்கள் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் பொன்னேரி வட்டம் புழுதிவாக்கம் மதுரா செம்பாக்கம் பகுதியை சேர்ந்த நீரில் மூழ்கி பலியான ரமேஷ் என்பவரின் மகன், மகள் குடும்பத்திற்கு முதல்-அமைச் சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளையும், கூட்டுறவு துறை சார்பாக 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கடன் உதவிகளையும் வழங்கினார்.

கோரிக்கை மனுக்கள்

அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 ஆயிரம் மதிப்பிலான 2 `பிரெய்லி' முறையில் தொடு உணர்வுடன் படிக்கும் வகையான கருவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story