திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி


திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 Dec 2021 6:50 PM IST (Updated: 7 Dec 2021 6:50 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருப்பாச்சூர், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, அகரம், எம்.ஜி.ஆர்.நகர், சத்தரை, பேரம்பாக்கம், கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம், சிற்றம்பாக்கம், மப்பேடு, பண்ணூர் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை கடும் பனி பொழிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக காலையில் வெள்ளை போர்வை போற்றியதை போல் சாலை மேகமூட்டமாக காணப்பட்டது. காலை 9 மணி வரை காணப்பட்ட பனி படிப்படியாக விலகியது. இதன் காரணமாக காலையில் பணிக்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் பனிப்பொழிவால் அவதியுற்றனர். இதன் காரணமாக தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக சென்றனர்.


Next Story