நீலகிரியில் தடை செய்யப்பட்ட 7½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நீலகிரியில் தடை செய்யப்பட்ட 7½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Dec 2021 7:44 PM IST (Updated: 7 Dec 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தடை செய்யப்பட்ட 7½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி, கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று நகராட்சி சுகாதார அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். 

ஊட்டி கமர்சியல் சாலை, மெயின் பஜார், பிங்கர்போஸ்ட் சேரிங்கிராஸ் உள்ளிட்ட இடங்களில் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ஒரு முறை பயன்படுத்தியதும், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரியவந்தது. 

தொடர்ந்து கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 7½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story