குன்னூர் அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை
குன்னூர் அருகே கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சிறுத்தை
ஊட்டி
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி குடியிருப்புகளுக்குள் அதன் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகே கரோலினாவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது மாடுகள் உள்பட ஒரு கன்று குட்டியினை மேய்ச்சலுக்கு விட்டார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கன்று குட்டியினை கவ்வி தேயிலை தோட்டத்திற்குள் இழுத்து சென்றது. மாடுகள் சத்தமிட்டதால் தேயிலை பறித்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, கன்று குட்டியை சிறுத்தை அடித்துக்கொன்றதை உறுதி செய்தனர். பின்னர் இறந்த கன்று குட்டியின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. தேயிலை தோட்டங்களில் சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story