கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி தங்கசங்கலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கி தங்கசங்கலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை கிராமத்தை சேந்தவர் உபேந்தர் (வயது 39). இவரது மனைவி நிர்மலா (35). நேற்று முன்தினம் இரவு மின் துண்டிப்பு ஏற்பட்டதால், வீட்டிற்கு வெளியே வரண்டாவில் தனது மகளுடன் நிர்மலா துாங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் அங்கு வந்த 3 மர்ம ஆசாமிகள், நிர்மலா கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது கண்விழித்த நிர்மலா கூச்சலிட்டார்.
இந்தநிலையில், மர்ம ஆசாமிகளில் ஒருவன், உருட்டு கட்டையால் அவரை தாக்கினான். பின்னர் நிர்மலாவின் கழுத்தில் கிடந்த தங்கசங்கலியை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த நிர்மலா கவரைப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story