சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குன்னூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் முரளிதரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "எங்கள் கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் கடந்து செல்ல முறையான வசதி இல்லை. இதனால், குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடாக உள்ளது. இந்த பிரச்சினை குறித்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பல முறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story