தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற பயணிகள் நிழற்குடை
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் லாடபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டில் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற் குடை மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏற வரும் பயணிகள் வெயில் மற்றும் மழையின்போது பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விஜயா, லாடபுரம், பெரம்பலூர்.
சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, அறந்தாங்கி வட்டம் கரூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமுலூர் கிராமத்தை சேர்ந்த கொங்கரான் வயல் எனும் கிராமத்தில் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குமுலூர், புதுக்கோட்டை.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, ரெத்திணக்கோட்டை
கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் செல்கிறது. மேலும் இவை தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ரெத்திணக்கோட்டை, புதுக்கோட்டை.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஜெமின் பேரையூர் கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெமின் பேரையூர், பெரம்பலூர்.
நிறுத்தப்பட்ட பஸ்சால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கீரனூரிலிருந்து கண்ணாம்பட்டி, தாயினிப்பட்டி ,கருப்பாடிப்பட்டி, ராப்பூசல் மேட்டுச்சாலை வழியாக இலுப்பூர் செல்லும் பஸ் கொரோனா காலத்தின்போது நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கண்ணாம்பட்டி, புதுக்கோட்டை.
கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர் வழியாக பொன்னகரம் வரை செல்லும் அரசு பஸ் காலை 8.30-க்கும், மாலை 5.30-க்கும் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தில் 7 கிராமங்களை கடந்து செல்லும் இந்த பஸ்சிற்கான அடுத்த பஸ் சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு வருகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் பஸ்சை தவறவிட்டால் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காலை, மாலை நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்குணம், பெரம்பலூர்.
அபாயகரமான பொது கிணறு
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புகழூர் நான்குரோடு 20 லைன் மேத்யூ நகரில் பாழடைந்த உபயோகமற்ற அபாய நிலையிலான கிணறு ஒன்று உள்ளது. இதனால் ஏதேனும் விபரீத சம்பவம் நடைபெறும் முன்பு இந்த கிணற்றை நிரந்தரமாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புகழூர், கரூர்.
சாலையில் படுத்திருக்கும் கால்நடைகள்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் உள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு, பகல் என மாடுகள் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மீன்சுருட்டி, அரியலூர்.
உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் தெப்பகுளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் கீழே விழும் நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சமயபுரம், திருச்சி.
போக்குவரத்திற்கு இடையூறு
திருச்சி வடக்கு துவாக்குடி மலையில் உள்ள பெரியார் மணியம்மை நகர் பகுதியில் ஏராளமான கால்நடைகளும், தெருநாய்களும் சாலையில் சுற்றி வருகின்றன. இவற்றால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். யுவராஜா, பெரியார் மணியம்மை நகர், திருச்சி.
சேறும், சகதியுமான சாலைகள்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சிகுறிச்சி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோழங்கநல்லூர் கிராமத்தில் தார்சாலை வசதி இல்லாததால் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சோழங்கநல்லூர், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சி 3-வது வார்டில் அமைந்துள்ள அங்கன்வாடியில் சுமார் 30 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முசிறி, திருச்சி.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கன் நாயக்கன் பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் அருகருகே அமைந்துள்ளன. சில மாதங்களாக இப்பள்ளிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பள்ளியின் வெளியே கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேய்க்கல் நாயக்கன் பட்டி, திருச்சி.
வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?
திருச்சி மாநகரம் அரியமங்கலம் கோட்டம் 15-வது வார்டு கிழக்கு தாராநல்லூர் பி.எஸ்.நகர் பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதியும், வடிகால் வசதியும் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழைநீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தாராநல்லூர், திருச்சி.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், குண்டூர் பர்மா காலனியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பள்ளி வளாகத்தில் உள்ளே குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்குள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தியாகசாந்தன் ,குண்டூர் பர்மா காலனி, திருச்சி.
பாதாள சாக்கடையில் அடைப்பு
திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் ஜெயிலனியா பிரதான தெரு 6-வது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டள்ளது. இதனால் அதன் மூடி வழியாக கடந்த 3 நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வதினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சுப்பிரமணியபுரம், திருச்சி.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாச்சக்குறிச்சி ஊராட்சி தீரன்நகரில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாரியப்பன், தீரன்நகர், திருச்சி.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதியில் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செல்லும் வழியில், வலையப்பட்டி வைரிசெட்டிப்பாளையம் இடையே காலனி பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதால் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலை பழுதடைவதுடன் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள கொப்பம்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியிலுள்ள திறந்தவெளி பொதுக்கிணறு வழிந்து கிராமத்தின் சாக்கடை மற்றும் குப்பைகள் அடைத்து சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொப்பம்பட்டி, திருச்சி.
Related Tags :
Next Story