கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 7 Dec 2021 11:41 PM IST (Updated: 7 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

போலி மதுபானம் தயாரித்த வழக்கில் கைதான 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மன்னார்குடி;
போலி மதுபானம் தயாரித்த வழக்கில் கைதான 2 பேர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 
எரிசாராயம் 
மன்னார்குடி அருகே உள்ள அசேஷம் பாரதிதாசன் நகர் 6-ம் நம்பர் வாய்க்கால் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விசுவநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் எரிசாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
விசாரனையில் அவர்கள் மன்னார்குடி தாலுகா மேலநத்தம் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது41) மற்றும் சரவணன் (36) என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் எரிசாராயத்தை கொண்டு போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும்   நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம்
இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரையின் பேரில் சத்தியமூர்த்தி மற்றும் சரவணன் ஆகிய இருவர் மீதும்  குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன்பேரில் இருவர் மீது குண்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story