திருச்சியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
அரியாற்றில் ஏற்பட்ட உடைப்பால் திருச்சியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருச்சி-திண்டுக்கல் ரோட்டில் பிராட்டியூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி, டிச.8-

மணப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 9 மணி வரை மணப்பாறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது. ஏற்கனவே, அப்பகுதியில் உள்ள பொய்கை குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளத்து தண்ணீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து அரியாற்றில் கரைபுரண்டு ஓடத்தொடங்கியது. சில இடங்களில் கரைகளில் உடைப்பெடுத்து அவரை, நெல் சாகுபடி வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. அதிகாரப்பட்டியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான வயல்வெளியில் வெள்ளம் புகுந்து நெல்பயிர்களை மூழ்கடித்தது.
500 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
திருச்சி சாந்தபுரத்தில் அரியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால், கணபதி நகர், வர்மா நகர், வலம்புரி நகர், ஆண்டாள் நகர், பூண்டி மாதாநகர், பிராட்டியூர், ஏ.ஏ.ஓ. காலனி, வர்மாநகர், கவுரிநகர், குபேரன் நகர், சுபதம்அவன்யூ வலம்புரிநகர், முருகன்நகர், தீரன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
அரியாற்றின் கரைப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் ஏற்கனவே கலெக்டர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பாதிப்பு
மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகப்படியான வெள்ளம் அரியாற்றில் வந்ததன் எதிரொலியாக புங்கனூர் அருகே அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பிற்பகலில் மழை வெள்ள நீர் வடிய தொடங்கியது. இருப்பினும் சாலைகள் படுமோசமாக மாறின. சாலை துண்டிப்பால் அப்பகுதி மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story