அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட கலெக்டர் வேண்டுகோள்


அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 Dec 2021 12:22 AM IST (Updated: 8 Dec 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

முப்படை வீரர்களின் குடும்ப நலனுக்காக அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

 ராணிப்பேட்டை
முப்படை வீரர்களின் குடும்ப நலனுக்காக அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

கொடிநாள் நிதி வசூல்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அவரது மனைவி கவிதா மற்றும் குழந்தைகள், முப்படை வீரர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்காக கொடிநாள் நிதியினை வழங்கினர்.

தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சி முத்துக்கடை பஸ் நிலையத்தில் இருந்து அப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும்  கடைகளில் முப்படை வீரர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்காக கொடி நாள் நிதியினை கடை, கடையாக சென்று திரட்டினார்.

அதிக நிதி வழங்க வேண்டும்

அப்போது அவர் பேசுகையில் இந்திய திருநாட்டின் பாதுகாப்பிற்காக முப்படை வீரர்கள் தங்கள் பெற்றோர்கள், மனைவி குழந்தைகளை பிரிந்து இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகளில் ஈடுபடும் முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக கொடிநாள் நிதி அதிக அளவில் வழங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும். 
ஆகவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழில்நிறுவனங்கள், தங்களால் இயன்ற கொடிநாள் நிதியினை வழங்கிட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியராஜன், தாசில்தார் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story