பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி
பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி
காட்பாடி
காட்பாடி அடுத்த கம்மவார் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். (வயது 24). இவர் சஞ்சீவிராயபுரம் மலையடிவாரத்திலுள்ள உள்ள ஒரு நிலத்தின் வழியாக சென்றுள்ளார். அப்போது அந்த நிலத்தில் பன்றி தொல்லை காரணமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் வேலு, தொழிலாளி பள்ளிகுப்பத்தை சேர்ந்த செந்தூர் ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story