ஏரிக்கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம். மீன்பிடி குத்தகைதாரர்கள் மீது விவசாயிகள் புகார்
ஏரிக்கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்
வாணாபுரம்
வாணாபுரம் அருகே குங்கிலியநத்தம் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இந்த ஏரியில் மீன்கள் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் மீன்களை பிடிப்பதற்காக கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏரியில் விரைவாக தண்ணீர் குறைந்து வருகிறது.
இதனால் கோடை காலங்களில் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story