மோட்டார் சைக்கிள் திருட்டு; சிறுவன் உள்பட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டு;  சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 12:49 AM IST (Updated: 8 Dec 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

மேலப்பாளையம் போலீசார் மேலப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பேட்டை கக்கன்ஜி நகரை சேர்ந்த சுடலை (வயது 22) மற்றும் 18 வயது சிறுவன் என்பதும், மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Next Story