காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்காலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள புதூர் செட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 40). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சென்னையை சேர்ந்த செல்லப்பாண்டி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் செட்டிமேட்டில் உள்ள தோட்டத்தில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து செல்லப்பாண்டி தனது மகனுடன் சென்னைக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துக்குட்டி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது சகோதரர் கணேசதுரை களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story