சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 Dec 2021 1:02 AM IST (Updated: 8 Dec 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத 3-வது சோம வாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவில், காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பல்வேறு திரவியங்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சுவாமி, அம்பாள் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் இறைவனை நோக்கி பல்வேறு பதிகங்கள் பாடினர். சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களின்படி கலந்து கொண்டு வழிபட்டனர்.

Next Story