2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 57). இவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட சிறுமி 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்ட அளித்த புகாரின்பேரில் வினோத்குமார்(27) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள 2 பேருக்கும் போலீசாரால் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story