காணாமல் போன பெண் பிணமாக மீட்பு


காணாமல் போன பெண் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 1:11 AM IST (Updated: 8 Dec 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் காணாமல் போன பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பரமசிவன் மகள் சுகந்தரி (வயது 35). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கணவனை பிரிந்து தந்தை பரமசிவன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்த நிலையில் நேற்று காலை அருகில் உள்ள கிணற்றில் சுகந்தரி பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர். சுகந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரனண நடத்தி வருகின்றனர்.

Next Story