வேன் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 பேர் படுகாயம்
திருவண்ணாமலையில் இருந்து அய்யப்ப பக்தர்கள் 20 பேர் வேனில் அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென சாலையின் குறுக்கே இருசக்கரவாகனத்தில் வந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்த கஜேந்திரன் (வயது 37), வேனில் பயணம் செய்த திருவண்ணாமலையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் பழனி (52), வீரமணி (40), கண்ணன் (35), சுந்தர்ராஜன் (53) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
வேனில் பயணம் செய்த மற்ற அனைத்து பக்தர்களும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story