மாவட்ட செய்திகள்

டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருட்டு + "||" + theft

டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருட்டு

டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருட்டு
மதுரையில் டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை, 
மதுரையில் டாக்டர் வீட்டில் 17½ பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டர் வீடு
மதுரை கூடல்நகர் சொக்கலிங்க நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது 65). ஓய்வு பெற்ற மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர். தற்போது அவர் கே.கே.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் உள்ள அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
பின்னர் மாலை சேகரன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன.
அதிர்ச்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீ சாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு என மொத்தம் 17½ பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்லும் போது கதவை பூட்டி பின்பக்கம் உள்ள ஜன்னலை திறந்து உள்ளே மறைவாக சாவியை வைத்து செல்வது வழக்கம். அதை யாரோ மர்மநபர்கள் கண்காணித்து வந்து, சம்பவத் தன்று சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
விசாரணை
மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மதுரையில் பட்டப்பகலில் டாக்டர் வீட்டில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு
சிவகாசியில் பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
3. வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
5. வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.