மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிப்பு
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
மதுரை,
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
விரிவாக்கம்
மதுரை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படு வதற்கு முன்பு மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. இந்த வார்டுகள் மாநகராட்சி வடக்கு, மாநகராட்சி கிழக்கு, மாநகராட்சி மேற்கு, மாநகராட்சி தெற்கு என 4 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. கடந்த 2011-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போதும் மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாமல் மண்டலம்-1, மண்டலம்-2, மண்டலம்-3, மண்டலம்-4 என பெயர் மாற்றம் மட்டும் செய்யப்பட்டன.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு விரைவாக சேவை அளிக்கும் நோக்கத்துடன் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அதற்கு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு மற்றும் மதுரை மத்தியம் என பெயரிடப்பட்டு உள்ளது.
வார்டுகள்
ஒவ்வொரு மண்டலத்திலும் இடம் பெற்றுள்ள வார்டுகளின் விவரம் வருமாறு:-
* மதுரை கிழக்கு மண்டலத்தில் 3-வது வார்டு முதல் 14 வார்டுகள் வரையும், 16,17,18,19, 36 முதல் 40 வரையிலான வார்டுகள் என மொத்தம் 21 வார்டுகள் இருக்கும்.
* மதுரை வடக்கு மண்டலத்தில் வார்டுகள் 1,2,15,20 முதல் 28 வரையிலும், 31 முதல் 35 வரையிலும், மற்றும் 63 முதல் 66 வரை உள்ள வார்டுகள் என 21 வார்டுகள் இருக்கும்.
* மதுரை மத்திய மண்டலத்தில் 50,51,52,54 முதல் 62 வரை, 67 முதல் 70 வரை, மற்றும் 75,76,77 ஆகிய வார்டுகள் என மொத்தம் 19 வார்டுகள் இருக்கும்.
தீர்மானம்
* மதுரை தெற்கு மண்டலத்தில் 29,30,41 முதல் 49 வரையும், 53 மற்றும் 85 முதல் 90 வரை உள்ள வார்டுகள் என மொத்தம் 18 வார்டுகள் இருக்கும்.
* மதுரை மேற்கு மண்டலத்தில் வார்டுகள் 71 முதல் 74 வரை, 78 முதல் 84 வரை மற்றும் 91 முதல் 100 வரை என வார்டுகள் மொத்தம் 21 வார்டுகள் இருக்கும்.
மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி தேர்தலுக்கு பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story