மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர் அணையின்16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகுகள் திறக்கப்பட்டன. தற்போது அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்றுமுன்தினம் அதிகாலை அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் வரத்து நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 400 கனஅடியாக குறைந்தது. இதனால் அணையின் 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 25 நாட்களாக 120 அடியிலேயே நீடிக்கிறது.
Related Tags :
Next Story