‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
முட்புதர்களை அகற்ற வேண்டும்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா 87 கவுண்டம்பாளையம் ஊராட்சியில் குமாரமங்கலம் நாடார் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி செடி, கொடி, முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் தொட்டியின் கீழே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செடி, கொடிகளில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், குமாரமங்கலம் நாடார் தெரு, திருச்செங்கோடு.
====
பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம்
திருச்செங்கோடு ஜீவா நகரில் பெண்களுக்கு என தனியாக 2 சுகாதார வளாகங்கள் உள்ளன. தற்போது இந்த 2 சுகாதார வளாகங்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அங்கு முறையாக தண்ணீர் வசதி இல்லை. கழிவறை கதவுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அங்கு செல்லவே பெண்கள் அச்சமடைகிறார்கள். எனவே இந்த பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனுசாமி, ஜீவாநகர், திருச்செங்கோடு.
=====
மின்சார வசதி தேவை
நாமக்கல் கூலிப்பட்டியில் நந்தவனம் தெரு உள்ளது. இந்த பகுதி இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2-வது தெருவில் மினசார வசதி இதுவரை இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
ஊர்பொதுமக்கள், நந்தவனம் 2-வது தெரு, கூலிப்பட்டி, நாமக்கல்.
====
சாலையில் செல்லும் கழிவுநீர்
ஆத்தூர் நகராட்சியில் 30-வது வார்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சேகோ ஆலையின் கழிவுநீரும் அங்கு தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியாக தான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ெதாழிலாளர்கள், பொதுமக்கள், நோயாளிகள் ஆத்தூர் நகர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.
30-வது வார்டு பொதுமக்கள், ஆத்தூர் நகராட்சி.
=====
சுகாதார சீர்கேடு
சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ளது இடங்கணசாலை பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட காடையாம்பட்டி பெரிய ஏரியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசி சுற்றுப்புற பகுதிகளில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த ஏரியின் நீர்நிலையும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த ஏரியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பச்சமுத்து, இடங்கணசாலை, சேலம்.
====
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்விளக்கு எரியாத நிலையில் உள்ளது. இதனால் ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே மிகவும் அச்சப்படுகிறார்கள். மேலும் சில நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிகொள்கிறார்கள். எனவே இந்த பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், கணபதி பாளையம், சேலம்.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் அன்னதானப்பட்டி வ.உ.சி. நகர், பாண்டு நகர் அருகில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகள் அள்ளாததால் 2 குப்பைத் தொட்டிகளும் நிரம்பி சாலையில் சிதறி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. மழைக்காலம் என்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்துள்ள குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-து,முருகேசன், அன்னதானப்பட்டி, சேலம்.
Related Tags :
Next Story