ஏற்காட்டில் தரைவழி தூர்தர்ஷன் ஒளிபரப்பு 31-ந் தேதியுடன் நிறுத்தம்
ஏற்காட்டில் தரைவழி தூர்தர்ஷன் ஒளிபரப்பு சேவை 31-ந் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஏற்காடு:
ஏற்காட்டில் தரைவழி தூர்தர்ஷன் ஒளிபரப்பு சேவை 31-ந் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தரைவழி ஒளிபரப்பு
சேலம் மாவட்டத்தில் மலை கிராம மக்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதி மக்கள் வசதிக்காக தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிலையம் ஏற்காட்டில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகிற 31-ந் தேதியுடன் தூர்தர்ஷன் தரைவழி சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான தனியார் சேனல்கள் சேவைக்கு வந்த நிலையில் பெரும்பான்மையான மக்கள் டி.டி.எச். மற்றும் இதர சேவைகளுக்கு மாறி விட்டனர். தூர்தர்ஷன் சேவையை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. அதன் காரணமாக தரைவழி சேவையை மூடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்காட்டில் உள்ள ஒளிபரப்பு நிலையத்தில் வரும் நாட்களில் கொடை எப்.எம். செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தது
1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் ஏற்காட்டில் தூர்தர்ஷன் தரைவழி சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையால் சேலம் மட்டும் அல்லாமல் நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்களும் பயன் அடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story