உடன்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
உடன்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி பெருமாள்புரம் வடக்குத்தெருவை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் செந்தில்குமார் (வயது 37). இவருடன் பிறந்தவர்கள் 6 ஆண், 4 பெண். இந்த நிலையில் இவர் ஒரு வயது முதல் உடன்குடி வெங்கடாசலபுரம் மூக்கன்சுடலை ஆசாரிக்கு தத்துபிள்ளையாக கொடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சென்னையிலுள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடன்குடி வந்தவர் திரும்பி செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story