விளைநிலங்களில் உடைத்து வீசப்படும் காலிமதுபாட்டில்கள்
விளைநிலங்களில் உடைத்து வீசப்படும் காலிமதுபாட்டில்கள்
நொச்சிபாளையத்திலிருந்து மீனாம்பாறை செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து மது பானங்களை குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து வீசி விடுகின்றனர். இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுகிறது. இதனால் விளைநிலங்களில் புகுந்து மதுபானங்களை அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் போக்குவரத்து நெரிசலின்போது ஆம்புலன்ஸ் செல்வதற்காக போக்குவரத்து போலீசார், தடுப்புகளை வைத்து ரோட்டின் ஓரத்தில் தனியாக வழி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் அந்த ரோடு, குண்டும், குழியுமாக உள்ளது. எனவே அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அம்மன் கார்டன் குடியிருப்பு பகுதியில் தார்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர். எனவே புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story