பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்
உடுமலையில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாதாள சாக்கடை
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் சாலைகளில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆங்காங்கு ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்து குழாய் மூலம் இந்த தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் கழிவுநீர் அங்கிருந்து பிரதான குழாய்மூலம் ஏரிப்பாளையத்தை அடுத்து குறிஞ்சேரி சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சென்றடையும்.
இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கு உள்ள ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகளின் மூடிகளின் மீது வாகனங்கள் ஏறி, இறங்கி செல்வதால் பல இடங்களில் இந்த தொட்டிகளின் மூடிகள் பழுதடைந்தும், உடைந்தும் விடுகிறது. அதனால் மூடிகள் வழியாக கழிவுநீர் வெளியேறுவதும், நகராட்சி பணியாளர்கள் வந்து புதியமூடிகளை பொருத்தி சீரமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
கோரிக்கை
இந்த நிலையில் தற்போது உடுமலையில் சரவணா வீதியில் டாஸ்மாக் கடைக்கு முன்பும் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது.இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தகழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படுமோ? என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனால் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாதபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சிக்கு, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story