தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 6:49 PM IST (Updated: 8 Dec 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி சுற்றுப்பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிக அளவில் உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் (பொறுப்பு) மேற்பார்வையில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முள்ளக்காடு நேருஜிநகர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் மகன் மாரிமுத்து (வயது37) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story