அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் சிக்கின
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து இருந்தது. அவை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் உள்ள உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வந்தனர். மேலும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி வனத்துறை சார்பில் இந்த கிராமத்தில் 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 35-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின. கூண்டில் சிக்கிய குரங்குகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். இந்த மாத இறுதியில் கிராமத்தில் ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெற உள்ள நிலையில் குரங்குகள் பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் சுமார் 100 குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story