தூத்துக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் மனைவி, மகள் முன்னிலையில் ஒப்பந்ததார் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது
சாயர்புரம்:
தூத்துக்குடி யூனியன் அலுவலக வளாகத்தில் நேற்று ஒப்பந்ததாரர் ஒருவர் மனைவி, மகள் முன்னிலையில் உடலில் மண்ணைண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டுரன்காடு சேர்ந்த ராஜா (வயது 37). இவர் பஞ்சாயத்து ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் நேற்று காலையில் மனைவி மாரிதினா(36), மகள் வேதிகா(6) ஆகியோருடன் புதுக்கோட்டையிலுள்ள தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு வந்தார்.
யூனியன் அலுவலக வளாகத்தில் அவர் கொண்டு வந்த கேனில் இருந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் ஓடிச்சென்று, ராஜா கையில் வைத்து இருந்து தீப்பெட்டியை தட்டி விட்டார். உடனடியாக குடத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி காப்பாற்றினார்.
அதிகாரி பேச்சுவார்த்தை
பின்னர் அவருடன் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு வர்த்தக ரெட்டி பட்டி பஞ்சாயத்தில் பிளம்பிங் எலக்ட்ரிகல் மற்றும் புதிய பணிகள் மேற்கொள்ள பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் அளித்த ஒப்புதல் மூலம் கடந்த 1.4. 2020 முதல் பணிகளை மேற்கொண்டு வந்தேன். நான் செய்த பணிக்கான தொகையினை கடந்த 1.10.2020 வரை சரியாக வழங்கி வந்தனர். இந்நிலையில் வர்த்தக ரெட்டிபட்டி பஞ்சாயத்தில் புதிய நிர்வாகம் வந்துள்ளது. இதனால் தான் செய்த பணிக்கான தொகை ரூ.9 லட்சத்து 21 ஆயிரம் பஞ்சாயத்தில் கேட்டபோது அவர்கள் சரியான பதில் கூறவில்லை. 1.4.2021 பராமரிப்பு பணிகளை முடித்து விட்டேன். இதற்கான தொகை எனக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாமல் உள்ளது. அதனால் தான் வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றேன்’ என்றார்.
அதிகாரி உறுதி
இதுகுறித்து இன்னும் 2 நாட்களில் உங்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்து கலெக்டர் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து ராஜா, மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story