கிருஷ்ணகிரி, கெலமங்கலத்தில் அம்பேத்கர் நினைவு நாள் கடைபிடிப்பு
கிருஷ்ணகிரி, கெலமங்கலத்தில் அம்பேத்கர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
அம்பேத்கர் நினைவு நாள்
சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசுதுரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் சேகர், ரகமத்துல்லா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கெலமங்கலம் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் தளி சட்டமன்ற தொகுதி செயலாளர் ராஜப்பா, நகர செயலாளர் முனிராஜ், ஒன்றிய செயலாளர் யுவராஜ், தொழிலாளர்கள் விடுதலை கட்சி முன்னணி ஜெகன்நாதன், சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் மம்முத்ஜான், ராசுக்குட்டி, அஸ்கர், சாதிக் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story