கடலூரில், மீன் ஏற்றி வந்த லாரி மொபட் மீது மோதி விபத்து: மகன் கண் எதிரே தாய் தலை நசுங்கி பலி


கடலூரில், மீன் ஏற்றி வந்த லாரி மொபட் மீது மோதி விபத்து: மகன் கண் எதிரே தாய் தலை நசுங்கி பலி
x
தினத்தந்தி 8 Dec 2021 9:53 PM IST (Updated: 8 Dec 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மீன் ஏற்றி வந்த லாரி மொபட் மீது மோதியதில் மகன் கண் எதிரே தாய் தலை நசுங்கி பலியானார்.

கடலூர், 

கடலூர் அருகே திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 54). இவர் தனது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். 

இந்த கடைக்கு தேவையான மளிகைபொருட்கள் வாங்குவதற்காக நேற்று தனது மகன் வெங்கடேசன் (26) என்பவ ருடன் கடலூர் நோக்கி மொபட்டில் வந்தார்.

அவர்கள் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது, பின்னால் மீன் ஏற்றி வந்த லாரி அவர்கள் சென்ற மொபட்டில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் ரோட்டில் வலது, இடது புறமாக தனித் தனியாக கீழே விழுந்தனர். 

இதையடுத்து வெங்கடேசன் லேசான காயத்துடன் சுதாரித்து எழுவதற்குள், அவர் கண் எதிரே ராஜலட்சுமி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேய தலை நசுங்கி உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதை பார்த்த வெங்கடேசன் கதறி அழுதார். பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் இறந்து கிடந்த ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது மகன் வெங்கடேசன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். 

அதன்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசனுக்கு இன்னும் 10 நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், அவரது தாய் அவரது கண் முன்னே துடி, துடித்து பலியான சம்பவம் அவரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story