சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?
திருக்குவளை அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேளாங்கண்ணி:
திருக்குவளை அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாலையில் பள்ளம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் இறையான்குடி, களத்திடல்கரை, கருங்கண்ணி, மகிழி ஆகிய கிராமங்கள் வழியாக வெள்ளை ஆறு செல்கிறது. இந்த ஆறு கடலில் கலக்கிறது. திருக்குவளை அருகே களத்திடல்கரையில் இருந்து இறையான்குடி வரை உள்ள ஆற்றங்கரையில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தார் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அவலம் உள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வாகனங்களில் எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி எற்படும் முன்பு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story