தினத்தந்தி புகார் பெட்டி
நாகை,திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சியில் உள்ளிக்கோட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வடக்கு தெரு ஆற்றங்கரை சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில நேரங்களில் தடுமாறி கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-மணிபாரதி, உள்ளிக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் கஞ்சாநகரம் உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் ஒத்ததெருவில் உள்ள சாலை சேதமடைந்து மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் தண்ணீர் தேங்குவதால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தருவதோடு, இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-பொதுமக்கள், கஞ்சாநகரம்.
வடிகால் வசதி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சிறு மழைபெய்தாலும் தண்ணீர் வடிய வழியின்றி குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகுந்த சிரமத்தை அடைந்து வருகின்றனர். மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை தண்ணீரை அப்புறப்படுத்தி விட்டு, சாலையை சீரமைத்து கொடுப்பதுடன் தண்ணீர் வடிவதற்கு வசதியாக வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்
-பொதுமக்கள், செம்பனார்கோவில்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வேப்பஞ்சேரி பகுதியில் நீடூர்- மேலதண்ணிலபாடி செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயம் அடைந்து வரும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தரவேண்டும்.
-பொதுமக்கள், வேப்பஞ்சேரி.
Related Tags :
Next Story