ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
ஆற்காடு
ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பிரபாவதி. இருவரும் நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் இந்த வீட்டை பூட்டி விட்டு ஜெயக்குமாரின் மற்றொரு வீட்டுக்கு சென்று இரவு படுத்துத் தூங்கினார்.
நேற்று அதிகாலை அவரின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டுக்கு வந்து ஜெயக்குமார் பார்த்தபோது, மர்ம நபர் யாரோ பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது ெதரிய வந்தது.
இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story