ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
ராணிப்பேட்டை
ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா சத்திரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா (24). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சுரேஷ் உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். அதையடுத்து ஆற்காடு பகுதியில் இருந்து ஆம்புலன்சு ஒன்று அங்கு விரைந்து சென்றது. பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த வெண்ணிலாவை ஆம்புலன்சில் ஏற்றி லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்றனர்.
நெல்லிகுப்பம் அருகே சென்றபோது வெண்ணிலாவுக்கு பிரசவவலி அதிகரித்தது. அதனால் வேறு வழியின்றி மருத்துவ உதவியாளர் சரண்யா பிரசவம் பார்த்தார். வெண்ணிலாவுக்கு ஆம்புலன்சில் அழகான பெண்குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story