ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஜோலார்பேட்டை
குடியாத்தம் அருகே வளத்தூர் ரெயில் நிலையம் யார்டு பகுதியில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த புனித் ராஜ்குமார் என்பவரின் மகன் பிரேம் பிகாரி (வயது 37) என்பதும், பீகாரிலிருந்து பெங்களூரு சென்றபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story