முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 27 பேர் மீது வழக்கு


முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 27 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Dec 2021 11:53 PM IST (Updated: 8 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வக்கீல்-மாதர் சங்கத்தினர் மோதல் விவகாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எம்.எல்.ஏ. உள்பட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல்லில், போக்சோ வழக்கில் கைதான தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு மகிளா கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6-ந்தேதி கோர்ட்டு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அங்கு வந்த வக்கீல் ஒருவர், மாதர் சங்கத்தினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை, மாதர் சங்கத்தை சேர்ந்த சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த வக்கீல் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாதர் சங்கத் தலைவி ராணி, ஜானகி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது உள்பட 27 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோர்ட்டு முன்பு அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தற்காக மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story