கோவையில் இருந்து சென்ற மருத்துவக்குழு
கோவையில் இருந்து சென்ற மருத்துவக்குழு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரியில் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விழுந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் குன்னூர் புறப்பட்டு சென்றனர்.
பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான இந்த குழுவில் தீக்காய பிரிவு டாக்டர், அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கார் மூலம் குன்னூர் சென்றனர்.
அவர்கள் விரைந்து செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனம் ஒன்று காரின் முன்பு சென்றது. மேலும் மீட்பு பணிக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்சும் சென்றது.
Related Tags :
Next Story