மாவட்ட செய்திகள்

2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது + "||" + Cannabis

2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
திருச்சி, டிச.9-
திருசு்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மீன்மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக திருச்சி பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த சுதாகரை (வயது 42) காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஸ்ரீரங்கம் அருகே மூலத்தோப்பு பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த சுதாகரை (36) ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் கைது செய்தார். அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் திருச்சி ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாரை (30) ராம்ஜிநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க 8 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க புதிதாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.
2. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்: கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீச்சு
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் வந்த 2 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனா்.
3. கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா, குட்கா, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4. ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்கள் நடந்த கஞ்சா வேட்டையில் 2,423 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்கள்
கடலில் மிதந்து வந்த 190 கிலோ கஞ்சா பார்சல்களை கைப்பற்றி இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.