லாரி மோதி முதியவர் பலி


லாரி மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2021 12:37 AM IST (Updated: 9 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி முதியவர் பலியானார்.

தரகம்பட்டி, 
கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமம் செட்டியபட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). இவர் மாவத்தூரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டு ரெட்டியபட்டி, கரூர்-மணப்பாறை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. 
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மதுரை ஐசலானி தெருவைச் சேர்ந்த பிரசாந்த் (29) என்பவரை கைது செய்தனர்.

Next Story