உடற்கூறுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு


உடற்கூறுகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 12:51 AM IST (Updated: 9 Dec 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே இரட்டை சிசுக்களுடன் கர்ப்பிணி இறந்தார். இதையடுத்து உடற்கூறுகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை, 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியை சேர்ந்தவர் சங்கன். இவருடைய மனைவி அனந்தாயி (வயது 23). 5 மாத கர்ப்பிணியான இவர் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த 5 மாத 2 ஆண் சிசுக்களும் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. அதே நேரத்தில் அனந்தாயி புரோட்டா சாப்பிட்டதுதான் உயிரிழப்புக்கு காரணம் என தகவல் பரவியது.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், “பிரேத பரிசோதனையின் போது அவர் இரட்டை ஆண் சிசுக்களை வயிற்றில் சுமந்திருந்தது தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனையில் சேகரிக்கப்பட்ட உடற்கூறுகள், சாப்பிட்டு வயிற்றில் தங்கிய உணவு ஆகியவை ராமநாதபுரம் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது. அங்கு பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் வந்த பிறகுதான் அனந்தாயி சாவுக்கான காரணம் குறித்து கூறமுடியும்” என கூறினர்.  இதுகுறித்து பந்தல்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story