ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2021 1:23 AM IST (Updated: 9 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் தெற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையிலும், மண்டல செயலாளர் ஜெயராஜ் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனைக்குட்டம் அணையில் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். வெம்பக்கோட்டை அணையில் கழிவு நீர் விடப்படுவதை தடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்்ப்பாட்டம் நடைபெற்றது.  மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story