தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
மேம்பாலத்தில் நடைபாதை சேதம்
திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் இருபக்கத்திலும் நடைபாதை உள்ளது. இதில் தினமும் காலை, மாலையில் பலர் நடைபயிற்சி செல்கின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் சில இடங்களில் சிமெண்டு சிலாப்புகள் சேதம் அடைந்து, பள்ளங்கள் உருவாகி விட்டன. இதனால் நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே மேம்பாலத்தின் நடைபாதையை சரிசெய்ய வேண்டும். -கோவிந்தராஜ், திண்டுக்கல்.
அடிப்படை வசதிகள் தேவை
தேனி மாவட்டம் வீரபாண்டியில் காளியம்மன் கோவில் பின்பகுதியில் உள்ள குடியிருப்பில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். -அழகர்சாமி, வீரபாண்டி.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
பழனி பஸ் நிலையம் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவில் சாலையின் நடுவே மாடுகள் படுத்து கொள்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதோடு, மாடுகளும் காயம் அடைகின்றன. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அறிவாசான், மானூர்.
புறவழிச்சாலை ஓரத்தில் குப்பைகள்
வத்தலக்குண்டு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் திண்டுக்கல்-பெரியகுளம் புறவழிச்சாலையின் ஓரத்தில் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் புறவழிச்சாலையின் ஓரத்தில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இது சுகாதாரக்கேட்டை உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ்பாபு, வத்தலக்குண்டு.
Related Tags :
Next Story