மாநில ஜூனியர் தடகள போட்டிகள் தொடக்கம்
நத்தம் என்பிஆர்நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் கல்லூரியில் மாநில ஜூனியர் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 35-வது ஜூனியர் தடகள போட்டிகள் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிகளில் சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, நெல்லை, ஈரோடு உள்பட 38 மாவட்டங்களை சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட 4 ஆயிரம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்ற னர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை வரவேற்றார். தமிழ்நாடு மாநில தடகள சங்க செயலாளர் லதா தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார். முன்னதாக அவர் தடகள சங்க கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முதல் நாளான நேற்று சங்கிலி குண்டு எறிதல், போல்வால்ட் போட்டிகள் நடந்தன. வருகிற 12-ந்தேதி வரை 4 நாட்கள் தடகள போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டி தொடக்க நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி தாளாளர் முருகேசன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், மாநில தடகள சங்க இணைச்செயலாளர் உஸ்மான், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க செயலாளர் சிவக்குமார், என்.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆனந்த், கல்வியியல் கல்லூரி முதல்வர் தாமரை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தடகள சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story