என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை


என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 3:02 AM IST (Updated: 9 Dec 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம், 
திருவனந்தபுரம் ஆற்றங்கால் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் வினித் (வயது 21). இவர் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் அறை எடுத்து தங்கி, என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story