ஆவடியில் சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
ஆவடியில் சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆவடி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.55 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம் நோக்கியும், அரக்கோணத்தில் சென்னை சென்டிரல் நோக்கியும் வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ரெயில்வே ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதையடுத்து அரைமணி நேர தாமதத்துக்கு பிறகு இரவு 8.25 மணிக்கு மின்சார ரெயில் போக்குவரத்து சீரானது. மின்சார ரெயில்கள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
Related Tags :
Next Story